களைகட்டத்தொடங்கிவிட்டது நல்லூர் நாடகத் திருவிழா

pa1நல்லூரில் நடப்பது வெறும் கோயில் திருவிழாஅல்ல. அதுதமிழர்களின் பண்பாட்டுத் திருவிழா. திரு என்கிற கடவுளின் விழா. தமிழரின் பாரம்பரியத்தை இன்னும் தன்னகத்தே தக்கவைத்துக்கொண்டிருப்பது. அண்மைக்காலங்களாக அந்தபண்பாட்டுச் சொச்சம் வியாபார ஆதிக்கத்தில் திக்கித் திணறிவந்தாலும்,பண்பாட்டின் எச்சத்தையும் திருவிழாவின் பொலிவையும் இன்னும் மெருகேற்றும் பலதும் நல்லூரைச் சுற்றிஆங்காங்கேநடந்தேறிவரத்தான் செய்கின்றன.

இசைநிகழ்ச்சிகள்,கதாப்பிரசங்கங்கள்,கலைநிகழ்வுகள் என்பனஅவற்றுள் சிலவென்றால்,செயல் திறன் அரங்க இயக்கத்தினரின் நாடகத்திருவிழா நல்லூர் திருவிழாவின் மணிமகுடம். நாடகம் இல்லாமல் என்னவிழா? முத்தமிழில் மூன்றாம் தமிழ் இல்லாமல் ஒருவிழாவா? அதுவும் தமிழனின் விழாஎன்றால் அதில் என்னசிறப்பு? அதுதான் நாடகத்திருவிழாவின் இன்சுவை. கடந்த இரண்டாண்டுகளைப்போன்றே இம்முறையும் நல்லூர் நாடகத் திருவிழாகளைகட்டியிருக்கிறது. கடந்தபதினான்காம் திகதிஞாயிற்றுக் கிழமை திருவிழா ஆரம்பித்தது. கடந்த இரண்டுஆண்டுகளைவிடவும் இந்தஆண்டுமேலும் ஒருபரிணாமத்தைப் பெற்றிருக்கிறதுவிழா.
செயல் திறன் அரங்க இயக்கத்தின் சிறுவர் நாடகம், நவீனநாடகம், மோடிமைநாடகம், வேடமுகநாடகங்கள் மற்றும் பாரம்பரிய கலைக்கழகங்களின் கூத்துக்களும் இசைநாடகங்களும் என இந்தமுறையும் பத்துநாட்களுக்கும் மேலாக நாடகங்களுக்குக் குறைவில்லை. அவற்றோடு இம்முறை சிறப்புநிகழ்ச்சியாக இந்தியாவிலிருந்து வருகைதந்த தென்னிந்தியாவின் பாரம்பரிய இசைக்கலைஞர் ஆடலரசு வேணுவின் நெறியாள்கையில் தமிழரின் பாரம்பரிய இசைக்கருவி யானபறையிசையுடன்கூடிய குச்சியாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், கும்மியாட்டம், போன்றனவும் சேர்ந்துகொண்டு அணிசெய்கின்றன.
இவையெல்லாம் எம்மிடையேயும் புழக்கத்தில் இருந்த ஆட்டவடிவங்கள்தான். காலத்தால்மறக்கடிக்கப்பட்டு வேறுவிடயங்களால் வெள்ளையடிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்படுவிட்டோம். இப்போது அவற்றை மீட்டுருவாக்கம் செய்வதில் நாடகத்திருவிழா நல்லூர் பண்பாட்டுத்திருவிழாவுடன் இணைந்திருப்பது காலப்பொருத்தமும் சாலப்பொருத்தமும் என்பதில் ஜயமில்லை.
அதனால்தான் நாடகக் கலைகளின் அத்தனைவகைகளையும் ஒரேமேடையில் காணக்கிடைப்பது அழகானதும் அரிதானதுமானஒன்று இதனைநாம் திருவிழாவாகக் கொண்டாடுவது மகத்தானதுஎ ன்று தெரிவித்தார் நாடகத் திருவிழாவை ஆரம்பித்துவைத்து உரையாற்றிய விருந்தினர்களில் ஒருவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மூத்த ஆங்கிலவிரிவுரையாளரும் நாடகவியளாளருமான கந்தையா ஸ்ரீகணேசன். ஆடல் பாடல் நாடகம்,சித்திரக் கலைகள் மனிதனை வளப்படுத்துகின்றன. ஆளுமையைத் தருகின்றன. உலகிலே மிகப்பெரிய சாதனையாளர்கள் எல்லோரும் கலைகளினாலே வளம்பெற்றவர்கள்தான். இந்தக் கலைகள் அவசியம் தேவையானவை. ஆராதிக்கப்படவும் அனுபவிக்கப்படவும் வேண்டியவை என்றார் நாடகத்திருவிழாவில் இரண்டாம் நாளில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ்.பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும் பேராசிரியருமான எஸ். சுpவலிங்கராஜா. அவர் சொன்னதன் உண்மைப்பொருளைத் தொடர்ந்து வந்த ஆற்றுகைகளின்போது கண்முன்னே நேரில் காணமுடிந்தது. நாட்டார் கலைகளின் சங்கமத்தில் பார்வையாளராய் வந்திருந்த அத்தனை குழந்தைகளும் சிறுவர்களும் பெரியவர்களும் கலைமேடையில் சங்கமமாகியிருந்தனர் அது பார்ப்பதற்கு அத்தனை அழகு முதல் நாளில் அரங்கேறிய ஈழத்து நவீன நாடக உலகின் தாய் குழந்தை ம. சண்முகலிங்கத்தின் முயலார் முயல்கிறார் சிறுவர் நாடகத்தை ஐந்துவயதிலிருந்து 15 வயதுவரையான குழந்தைகளே நடித்திருந்தனர். குழந்தைகளின் படைப்புலகம் எவ்வளவுவிரிவானது. முட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டது என்பதை எடுத்துக்காட்டியது.
விட்டுவிடுதலையான உணர்வோ அந்தச் சிறுசுகளின் நடிப்பு அப்பப்பா! நாடகத் திருவிழாஎன்பது வெறும் கேளிக்கைக்கும் கொண்டாட்டத்துக்குமான ஒன்றுமட்டுமல்ல என்பது செயல்திறன் அரங்க இயக்கத்தினைத் தெரிந்தவர்கள் அறிந்ததே. எமது போரின் வலியும் அதன் பின்னரான வாழ்வியல் துயரும் நோவும் கூட நவீனநாடகங்களாக பாணன் குளத்தடியில் இருளின் துயில் கலைக்கின்றன. இந்தமுறை அதனை வலிகளை சொந்தமாக அனுபவித்த முல்லைத்தீவு மாவட்டக் கலைஞர்களே நேரடியாக நிகழ்த்துகிறார்கள். அவர்களுடைய படைப்புக்களான தூவானம் மற்றும் உருமறைப்பு போன்ற நாடகங்களைத் தமிழர்கள் ஒவ்வொருவரும் தவறவிடாமல் கட்டாயம் பார்க்கவேண்டும். பலபேசப்படாத பக்கங்களைப் பேசிய அந்த நாடகங்கள் அரங்கவெளியில் பொதுவாழ்வியலில் உள்ளபொறுப்புணர்வுக்கும் நம்பிக்கைக்கும் பெரும் எடுத்துக்காட்டு.
இணுவில் மாருதப்பரவீகவல்லிநாடகக் குழுவினரின் பக்தநந்தனார் இசைநாடகமும் பெரியவர்களை மாத்திரமன்றி வந்திருந்த சிறுவர்களையும் மேடையின் முன்புகட்டிப்போட்டிருந்தது சிறப்பு எங்கே எம் அடுத்த தலைமுறைக்கு எமது பாரம்பரிய கலைகள் பற்றிய புரிதலும் பிடிப்பும் இல்லாது போய்விடுமோ என்று ஆதங்கப்பட்டுக்கொண்டிருக்கும் மூத்த கலைஞர்களுக்கும் படைப்பாளிகளுக்கும் இப்படியான மாற்றங்கள் நம்பிக்கையையும் சந்தோசத்தையும் கொடுத்திருக்கிறது.
செயல் திறன் அரங்க இயக்கம் இப்படியான முன்னெடுப்புக்களை செயற்படுத்துவதன் மூலம் புதியபுதிய இளைய கலைஞர்களை உருவாக்குவதோடு பார்வையாளர்களையும் உருவாக்கி வருவது பெறுமதிகளுக்கு அப்பாற்பட்டது. தொடர்ந்து 25ம் திகதி வரை நாடகத்திருவிழாவை நடத்துகிறார்கள். தவறாமல் ஒருநாளேனும் போய் பார்த்துவிடுங்கள். மொத்தமும் பார்க்கக் கிடைத்தால் அது நல்லூர்க் கந்தனின் கலைஅருள்தான்.

About Active Theatre Movement

Active Theatre Movement (ATM) initially formed in 2002 as a small, theatre group from Jaffna in the north of Sri Lanka. Their aim was to rich theatre culture for the nation development In 2002 they create and tour a landmine education awareness programme for villagers who had recently returned to their homes after the 2002 ceasefire. Since that time, the group has grown to about 50 young actor members who perform in schools, Internally Displaced People’s camps and villages on a weekly basis. Their members are trained in traditional and contemporary performance skills as well as script writing by the two leaders of the organisation: director and dramatist Mr. Thevanath and playwright/theatre teacher Mr. Shanmugalingham. Their repertoire of theatre activities includes several children’s plays and street theatre performances. However, they do not only focus on landmine issues; Active Theatre Movement also creates theatre with village based women’s groups and has conducted regular theatre workshops for children affected by the 2004 tsunami. In addition to being recreational, Active Theatre Movement considers theatre an important element of children’s educational development, and since 2002, they have performed very high-quality children’s plays in hundreds of schools in the Jaffna district. The children’s plays written by Mr. Shanmugalingham often use animals as the central characters and are created for the children to enjoy an imaginative and creative theatre experience. Their plays incorporate music, singing, colorful sets, and costumes, and the group often begins and ends a school performance inviting the young audience members to sing and dance with them. For example, one of the plays that ATM has performed in many schools is that of Panja Nalla Verija (Five colored foxes). Adapted from a fable, the play tells the story of a fox that falls into the paint and his tail becomes painted five colors. The story follows his attempts to make the other animals in the forest believe he is another, more special animal. Active Theatre Movement’s performances are an entertaining and impressive theatre experience for children and teachers. They also conduct follow-up programs for teachers about the use of theatre in schools and education. As a group, ATM’s continued work contributes to the development of theatre in education and children’s theatre in Jaffna. Wrote: Jenny & Challote , Manchester University,2005

Posted on May 14, 2020, in Uncategorized. Bookmark the permalink. Leave a comment.

Leave a comment

Theatre Room Asia

A space that brings together current writing and thinking about theatre and performance from across the globe - to inspire, inform and fascinate

Active Theatre Movement

The Rich Theatre Culture for the Nation Development