Category Archives: Muttam Srilanka

Comments on WhatsApp about Nallur Drama Festival 2023

01/09, 9:50 pm] +1 (647) 588-3179: இன்று கூடிவிளையாடு பாப்பா நாடகம் பார்த்தேன். 45 வருடங்களுக்கு முன்னர் கொழும்பு கதிரேசன் மண்டபத்தில் பார்த்தது. வட்டக்களரி மேடை நாடகத்துக்கு சிறப்பாக இருந்தது. பின் மேடையில் காட்சிகளை வரைந்து காட்டியமை புதிது. நடிகர்கள் மேடையை மிக இலாவகமாகப் பயன்படுத்தினர்.பிற்பாட்டுப்  பாடிய சிறார்களின் பங்களிப்பு  பாராட்டத்தக்கது.  

—-ப. ஶ்ரீஸ்கந்தன்.

[01/09, 11:02 pm] Deivy: நான் இந்நாடகத்தை நல்லூர் நாடகத் திருவிழாவில்  பல முறை பார்த்துள்ளேன். ஆனால் இம்முறை புதுவடிவ வட்ட மேடையில் அரங்கேறியமை சிறப்பு.  படங்களை சுவரில் வரைந்து காட்டியமை புதுமையான ஓரு நுட்பம். பாத்திரங்களின் நடிப்பு அற்புதம். அனைத்து சிறுவர்களினதும் குதூகலத்துடன் கூடிய சிரிப்பு அவர்களினது ஈடுபாட்டை காட்டியது. நன்றி தேவா அண்ணா.

தெய்வி. தபோதரன்

மீண்டுமொரு குதூகலம்

செயல் திறன் அரங்க இயக்கம்/முற்றம் களத்தில் இன்று மீண்டுமொரு குதூகலம்

நல்லூரில் அமைந்துள்ள முற்றம் நாடகக் களத்தில் இன்று (22.09.2023)மீண்டுமொரு குதூகலம்இ அண்மையில் நல்லூர் நாடகத்திருவிழா நிறைவுற்று சிறுவர் நாடகக்கழகத்தின் பயிற்சிகளை ஆரம்பித்திருந்தோம். வுழமையாக வெள்ளி ஞாயிறு தினங்களில் மாலை 6.30 மணிக்கு சந்திப்பது வழமை. அந்த அடிப்படையில் இன்று பயிற்சியில் ஈடுபடுவதாக இருந்தது. அதற்கிடையில் பகல் வேளையில் அமெரிக்க Popular Culture ஆய்வாளர் Kristen Rudisill சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. எங்கள் சிறுவர் நாடக்ககுழு மற்றும் அவர்களின் நாடகங்கள் பற்றி உரையாடினோம். அவர் எமது நாடக மேடைக்கு அருகில் உள்ள ஹொட்டல் ஒன்றில் தங்கியிருந்தார் முடிந்தால் மாலை நடைபெறும் சிறுவர்களுக்கான பயிற்சிக்கு வாருங்கள் என்று சொல்லியிருந்தேன். பின்னர் தனது வரவை உறுதிப்படுத்தியிருந்தார். அவர் வரும் போது முடிந்தால் முயலார் முயல்கிறார் நாடகத்தை செய்து காட்டலாம் என்று எண்ணியிருந்தோம். இந்தத்தகவலைப் பகிர்ந்ததும் வேடஉடையணிந்து நடிக்க சிறுவர்கள் தயாரானார்கள். அவசர அவசரமாக பெற்றோரிடம் வேடஉடை கைப்பொருட்களை கொண்டு வருமாறு கூறினார்கள். தாங்களே முக ஒப்பனைகளையும் போட்டுக் கொண்டு நாடகத்தை செய்து காட்டினார்கள். நாடகம் பார்த்த Kristen Rudisill சிறுவர்களின் திறமை கண்டு வியந்தார். அவர்களிடம் பல விடயங்களை கேட்டறிந்து கொண்டார். அவர் இந்தியாவில் மதுரையில் தங்கியிருந்து சபா நாடகங்கள் பற்றி ஆய்வு செய்துள்ளார்.தமிழும் ஓரளவு பேசுகிறார்இ புரிந்து கொள்கிறார். சபா நாடகங்களைப் பற்றிய Identity and Play in Chennai’s Post-Independence Sabha Theater நூல் ஒன்றையும் வெளிக்கொண்டுவந்திருக்கிறார்.

தற்போது தமிழ்சினிமா நடனம் எவ்வாறு உலகத் தமிழர்களை இணைக்கிறது என்பது பற்றி ஆய்வு செய்வதோடு ஈழத்து நாடக அரங்கு பற்றியும் ஆய்வு செய்கிறார். அவர் ‘முயலார் முயல்கிறார்’ நாடகத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைதார் நடிகர்களைப் பாராட்டினார் அவர்களிடமிருந்து தான் எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். உடனே சிறுவர்கள் பறையிசை நடனத்தை அவருக்கு கற்றுக்கொடுத்தார்கள் அதனை கற்றுக்கொண்டார். உற்சாக மிகுதியில் நல்லூர் நாடகத்திருவிழாவில் மேடையேற்;றிய அசிங்கம் நாடகத்தையும் நடித்துக்காட்ட சிறுவர்கள் விரும்பினார்கள் அந்த வேளை நாடகத்தை ஒரு பத்து நிமிடங்கள் தாமதித் தொடங்குமாறு கேட்டுக் கொண்டு தனது காரில் ஓடிச்சென்று தனது இரு குழந்தைகளையும் அழைத்து வந்தார். அவர்கள் மகிழ்ச்சியாக அசிங்கம் நாடகம் பார்த்தார்கள். முடிவில் முசளைவநn சுரனளைடைட இன் இரண்டு மகன்களும் சேர்ந்து ஆடினார்கள்இ அவரின் இரண்டாவது மகன் எமது தாளத்திற்கு உருக்கொண்டாடினான். அது வெள்ளி மாலைநேரக்கொண்டாட்டமாக அமைந்தது. எங்களோடு கமலநாதன் அவர்கள் இணைந்து ‘கூடிவிளையாடு பாப்பா’ நாடகத்தின் துண்டங்களைச் செய்து காட்டினார். சக்திஇ ரஜனிஇ ஜனனீ மற்றும் சிறுவர்களின் பெற்றோர் இணைந்திருந்தார்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றிகளும்.நிகழ்வை நாடகர் ஊடகர் தேவானந்த் வழிப்படுத்தினார்.

Theatre Room Asia

A space that brings together current writing and thinking about theatre and performance from across the globe - to inspire, inform and fascinate

Active Theatre Movement

The Rich Theatre Culture for the Nation Development