Category Archives: நல்லூர் நாடகத் திருவிழா 2015

நல்லூர் நாடகத் திருவிழா 2018

சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விருந்தளிக்கக் காத்திருக்கிறது
My Invitation (3)

செயல் திறன் அரங்க இயக்கம் வருடாந்தம் நடத்துகின்ற நல்லூர் நாடகத் திருவிழா 2018 எதிரவரும் செப்ரெம்பர் மாதம் 01திகதி தொடக்கம் 5 திதி வரை நடைபெறவுள்ளது. நல்லூர் பெருந்திருவிழாக்காலத்தில் நடைபெறும் இந்த நாடகத் திருவிழாவில் பல்வேறு வகையான நாடகங்கள் மேடையேறுகின்றன. சிறுவர்களுக்கு பெருவிருந்தாக அமைகின்ற இந்த நாடகத் திருவிழா ஆறாவது தடவையாக நடைபெறுகின்றது.
நல்லூர் குறுக்கு வீதியில் அமைந்துள்ள செயல் திறன் அரங்க இயக்கத்தின் திறந்த வெளி அரங்கில் இந்த நாடக விழா நடைபெறவுள்ளது. தினமும் மாலை 7.00மணிக்கு ஆரமப்மாகும் இந்த விழா இரவு 9.00 மணி வரை தொடரும். தினமும் இரண்டு நாடகங்கள் மேடையேறவுள்ளன. குழந்தை ம. சண்முகலிங்கத்தின் ‘பஞ்சவர்ண நரியார், கூடிவிளையாடு பாப்பா மற்றும் முயலார் முயல்கிறார். சிறுவர் நாடகங்களும்; தே.தேவானந்தின் ‘ஒரு மோட்டார் சைக்கிளும் ஒன்பது பேரும்’ சிறுவர் நாடகம் ‘ஏகாந்தம்’ வேடமுக நாடகம், ‘பாட்டி’ பொம்மைகள் நாடகம் மற்றும் செந்திலின் ‘என்னால் முடியும்’ ஓராள் நாடகம் நாட்டார் வழக்கியற்கழகத்தின் ‘சத்தியவான் சாவித்திரி’ ‘மயானகாண்டம்’ இசைநாடகங்களும் மொத்தம் பத்து நாடகங்கள் மேடையேறவுள்ளன.

ஈழத்தின் நாடக வரலாற்றில் தனக்கென ஒரு தினித்துவமான இடத்தைக் கொண்டு இயங்கிவருகின்ற செயல் திறன் அரங்க இயக்கத்தின் நல்லூர் நாடகத் திருவிழா அரங்கு நிறைந்த காட்சியாக ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழமை. கட்டணங்கள் எதுவும் அறவிடப்படாது முற்றிலும் இலவசமாகக் இந்த நாடகத் திருவிழா நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. சிறுவர்கள், புலம்பெயர் தேசங்களிலிருந்து வந்திருக்கக்கூடிய தமிழ் உறவுகள் சுற்றுலாப்பயணிகள் எனப்பலரும் ஆர்வத்துடன் இதில் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கதாகும். சிறுவர்கள் பெரியவர்களுக்காக நடிக்கின்ற நாடகங்களை நல்லூர் நாடகத் திருவிழாவிலேயே காணமுடியும். அரங்கப் பயிற்சிபெற்ற சிறுவர்கள் நடிக்கின்ற நாடகங்களுக்கான களமாகவும் நல்லூர் நாடகத் திருவிழா விளங்குகின்றது. ஓகஸ்ட்; விடுமுறைக்காலத்தில் சிறுவர்களுக்கு இதுவொரு பெருவிருந்தாக, ஆனந்தமாக அமைகிறது. ஆர்வலர்களைப் பங்கு கொள்ளுமாறு செயல் திறன் அரங்க இயக்கத்தினர் கேட்டுக் கொள்கின்றார்கள்.

செயல் திறன் அரங்க இயக்கம்

IMG_0637
செயல் திறன் அரங்க இயக்கம் (Active Theatre Movement) 2003ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நாடக நிறுவனமாகும். ஈழத்தின் தமிழ் நாடக வரலாற்றில் தனக்கெனவொரு தனித்துவமான அடையாளத்தை பதிவு செய்திருக்கிறது. பல்வேறு வகைப்பட்ட ஐம்பதிற்கும் மேற்பட்ட நாடகங்களைத் தயாரித்து மேடையேற்றியிருக்கிறது. சிறுவர் அரங்கில் விசேட கவனம் கொண்டு தரமான பல சிறுவர் நாடகங்களை தயாரித்து பலநூறு பாடசாலைகளில் பல்லாயிரம் மாணவர்கள் மத்தியில் மேடையேற்றியதை இதன் சாதனை எனலாம். அதே வேளை சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை வெவ்வேறு நாடக வடிவங்கள் ஊடாக வெளிக்கொண்டுவந்து வெளிப்பாட்டு சுதந்திரத்தை ( Freedom of expression) நிலைநிறுத்த முயற்சித்திருக்கிறது. Read the rest of this entry

ஏகாந்தம் – தமிழ் நாடக வரலாற்றில் முதல் முறையாக வேடமுக நாடகம்

ஈழத்து நாடகப் பாரம்பரியத்தில் செயல் திறன் அரங்க இயக்கம் தனக்கான தனித்துவமான இடத்தினை தொடர்ந்து தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. நாடகத்துறைக்காக மட்டுமே இயங்குகின்ற இந்த நிறுவனம். நல்லூர் நாடகத் திருவிழா 2015 ஐ நடத்தயிதன் மூலம் தனக்கான வரலாற்றை பதிவு செய்திருக்கின்றது. இருபத்தியொரு நாடகங்கள் தொடர்ச்சியாக 12 நாட்கள் நடந்திருக்கின்றன. இதில் 17 நாடகங்களை செயல் திறன் அரங்க இயக்கம் தயாரித்து மேடையேற்றியிருக்கிறது. குறிப்பாக பலவேறு மோடிகளில் மேடையேற்றியது தான இதன் சிறப்பு எனலாம். சிறுவர் நாடகங்கள் – 03 ஓராள் அரங்கு – 10 கவிதை நாடகம் – 02 நகைச்சுவை நாடகம் – 01 வேடமுகநடகம் – 01

இதில் ஓராள் அரங்கும் வேடமுக நடகமும் செயல் திறன் அரங்க இயக்கத்தின் அறிமுக அரங்குகள். ஈழத்து அரங்கிற்கு இது ஒரு வரலாறாகும் எனபதில் சந்தேகம் இல்லை.ஏகாந்தம் முதியொர்பிரச்னையைப் பேசிய அற்புதமான நாடகம். அதன் உத்தி முறைகள் ஈழத்து அரங்கிற்கு புதியவை.

Mask Drama./Mask Theatre

Ekantham Tamil Drama produced by Active Theatre Movement in sep 2015

IMG_2452

Ekantham Tamil Mask Drama produced by Active Theatre Movement in sep 2015. Script and Direction by Thevananth

IMG_2470

Ekantham Tamil Mask Drama produced by Active Theatre Movement in sep 2015. Script and Direction by Thevananth

IMG_2479

Ekantham Tamil Mask Drama produced by Active Theatre Movement in sep 2015. Script and Direction by Thevananth

IMG_2535

Ekantham Tamil Mask Drama produced by Active Theatre Movement in sep 2015. Script and Direction by Thevananth

IMG_2618

Ekantham Tamil Mask Drama produced by Active Theatre Movement in sep 2015. Script and Direction by Thevananth

IMG_2620

Ekantham Tamil Mask Drama produced by Active Theatre Movement in sep 2015. Script and Direction by Thevananth

IMG_2622

Ekantham Tamil Mask Drama produced by Active Theatre Movement in sep 2015. Script and Direction by Thevananth

IMG_2661

Ekantham Tamil Mask Drama produced by Active Theatre Movement in sep 2015. Script and Direction by Thevananth

IMG_2665

Ekantham Tamil Mask Drama produced by Active Theatre Movement in sep 2015. Script and Direction by Thevananth

IMG_2689

Ekantham Tamil Mask Drama produced by Active Theatre Movement in sep 2015. Script and Direction by Thevananth

நல்லூர் நாடகத் திருவிழா 2015

நல்லூர் நாடகத் திருவிழா 2015 சிறப்புற நடந்து முடிவடைந்தது. 12 நாட்கள் இருபத்தியொரு பல்வகை நாடகங்கள் நாற்பது ஆற்றுகைகள். இதுவொரு வரலாற்று சாதனையென்றே சொல்லலாம். இறுதி இரண்டு நாட்கள் மட்டுமே பத்து நாடகங்கள் மேடையேற்றப்பட்டன. இறுதி நாளன்று வடக்கு மாகாண ஆளுநர் பங்கேற்றிருந்தார். அன்றைய தினம் நிகழ்வின் இறுதியில் இரவு 10.00 மணிக்கு கூடிவிளையாடு பாப்பா நாடகத்தை மேடையேற்றினோம். அந்த நாடகத்துக்காகவே சிறுவர்கள் ஆவலோடு காத்திருந்து நாடகத்தின் இடையிடையேயும் முடிவிலும் மேடையில் ஏறி தாமும் நாடகத்தில் ஒரு பங்காகியது மெய்சிலிர்க்க வைத்தது. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் கடந்தும் குழந்தை ம. சண்டுகலிங்கம் எழுதிய நாடகம் சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் மத்தியில் இவ்வளவு வரவேற்பைப் பெறுவது ஆச்சரியமளிக்கிறது. ஒரு சிறந்த கலைப்படைப்பு காலத்துள் வாழுமென்று சொல்வது இதைத்தானோ? படங்களில் சிறுவர்களின் குதூகலிப்பைப் பாருங்கள்!!!!

Koodivilazyadu papa produced by Active Theatre Movement

Koodivilazyadu papa produced by Active Theatre Movement

Theatre Room Asia

A space that brings together current writing and thinking about theatre and performance from across the globe - to inspire, inform and fascinate

Active Theatre Movement

The Rich Theatre Culture for the Nation Development